டென்மார்க் ராணி இரண்டாம் மார்கிரேத் அரியணையை துறக்கிறார்!

டென்மார்க் ராணி இரண்டாம் மார்கிரேத் அரியணையை துறக்கிறார்!

டென்மார்க் ராணி இரண்டாம் மார்கிரேத் அரியணையை துறப்பதாக அறிவித்துள்ளார்.

1972 ஆம் ஆண்டு அரியணை ஏறிய 83 வயதான ராணி 52 ஆண்டுகள் பதவி வகித்துள்ளார். இதன்மூலம் ராணி ஐரோப்பாவில் நீண்ட காலம் பதவி வகித்தவர் என்ற அந்தஸ்த்தை பெற்றுள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை நேரடி தொலைக்காட்சியில் ஆற்றிய பாரம்பரிய புத்தாண்டு உரையில்,

கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் வெற்றிகரமாக முதுகில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாகவும், “அறுவைசிகிச்சை இயல்பாகவே எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்கத் தூண்டியது எனவும், அடுத்த தலைமுறைக்கு பொறுப்பை விட்டுச்செல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது.

“இதுதான் சரியான நேரம் என்று நான் முடிவு செய்துள்ளேன். பதவியேற்ற 52 ஆண்டுகளுக்கு பின்னர் ஜனவரி 14 ஆம் திகதி டென்மார்க் ராணி பதவியில் இருந்து விலகுவேன்.

“தனது அரியணையை என் மகன் பட்டத்து இளவரசர் பிரடெரிக்கிடம் விட்டுச்செல்கின்றேன்” என்றும் அவர் கூறியுள்ளார்.

CATEGORIES
TAGS
Share This