காவலர் பணி தேர்வில் சன்னி லியோன்?

காவலர் பணி தேர்வில் சன்னி லியோன்?

இந்தியாவில் உத்தரபிரதேசத்தில் காவலர் பணிக்கான அனுமதி சீட்டில், சன்னி லியோன் புகைப்படம் பதிவேற்றம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய வம்சாவளியும், கனடாவில் பிறந்து அமெரிக்காவின் ஆபாசப் படவுலகில் கொடிகட்டிப் பறந்தவருமான சன்னி லியோன் தற்போது பாலிவுட் முதல் கோலிவுட் வரை இந்திய சினிமாக்களில் கவர்ச்சி தோற்றங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், உத்தர பிரதேச மாநிலத்தில் பொலிஸ் கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு பல்வேறு மாவட்டங்களில் நேற்று நடைபெற்றது.

இந்த தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு அனுமதிச் சீட்டு (Admit Card) வழங்கப்பட்டது.

இந்த அனுமதிச் சீட்டு இருந்தால் மட்டுமே தேர்வர்கள் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள்.

இந்நிலையில், பிரபல நடிகை சன்னி லியோனின் பெயர் மற்றும் புகைப்படத்துடன் ஒரு அனுமதிச் சீட்டு வழங்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

இதனை உத்தரப் பிரதேச காவல்துறை ஆட்சேர்ப்பு மற்றும் பதவி உயர்வு வாரியம் (UPPRB) வழங்கியுள்ளது.

அந்த அனுமதிச் சீட்டிற்கான தேர்வு மையம் கன்னோஜ் திர்வா பகுதியில் உள்ள பெண்கள் கல்லூரியில் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.

ஆனால் நேற்று நடைபெற்ற தேர்வில், அந்த அனுமதிச் சீட்டைக் கொண்டு சம்பந்தப்பட்ட தேர்வு மையத்தில் யாரும் தேர்வு எழுத வரவில்லை என கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

நடிகை சன்னி லியோனின் பெயர் மற்றும் புகைப்படத்தை வைத்து யாரோ சிலர் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர் என்றும், காவல்துறை ஆட்சேர்ப்பு வாரியத்தின் இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கும் இந்த விண்ணப்பம் தொடர்பாகவும், அதன் பின்னணி குறித்தும் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே சன்னி லியோன் உபி கான்ஸ்டபிள் தேர்வுக்கு விண்ணப்பித்ததாக வைரல் பதிவுகள் இணையத்தில் பரவி வருகின்றன.

CATEGORIES
TAGS
Share This