தமிழரசுக் கட்சியின் பொதுச் சபைக் கூட்டத்தின் தீர்மானங்கள்?

தமிழரசுக் கட்சியின் பொதுச் சபைக் கூட்டத்தின் தீர்மானங்கள்?

இலங்கை தமிழரசுக் கட்சியின் புதிய நிர்வாகத்திற்கான தெரிவுக் கூட்டம் இன்று இடம்பெற்று வருகின்றது.

திருகோணமலை மூன்றாம் கட்டைப் பகுதியில் உள்ள தனியார் விருந்தகம் ஒன்றில் இந்தக் கூட்டம் நடைபெறுகின்றது.

இலங்கை தமிழரசு கட்சியின் புதிய தலைவராக தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், 32 பொதுக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இதன்போது, இலங்கை தமிழரசுக் கட்சியின் புதிய நிர்வாகக் குழு நியமிக்கப்படவுள்ளது.

இதேவேளை, வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவினால் பரிந்துரைக்கப்பட்டுள்ள 11 கோரிக்கைகள் அடங்கிய மனு இலங்கை தமிழரசுக் கட்சியின் பிரதிநிதிகளிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக அந்தக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் கண்டுமணி லவகுகராசா தெரிவித்துள்ளார்.

இதனிடையே, இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளராக திருகோணமலையைச் சேர்ந்த குகதாசனை நியமிப்பதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இன்று முற்பகல் திருகோணமலையில் இலங்கை தமிழரசு கட்சியின் மத்திய குழு கூட்டம் நடைபெற்ற நிலையில் இந்தக் கூட்டத்தில் பல்வேறு குழப்பங்களுக்கு மத்தியில் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.

எனினும் இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு எதுவும் இதுவரையில் வெளியிடப்படாத நிலையில் தொடர்ந்து கூட்டம் நடைபெற்று வருவதுடன் இன்று பிற்பகல் நடைபெற உள்ள பொதுச் சபைக் கூட்டத்திலேயே இது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This