இன்று திருநீற்றுப் புதன்!

இன்று திருநீற்றுப் புதன்!

கிறிஸ்தவர்களின் புனித நாள்களில் ஒன்றான திருநீற்றுப் புதன் தினம் இன்றாகும். இன்று முதல் கிறிஸ்தவர்களின் புனித புண்ணிய தவக்காலம் ஆரம்பமாகிறது.

ஆலயங்களிலும் திருநீற்றுப் புதன் திருப்பலி இன்று (14) காலை பங்குத்தந்தையர்களினால் ஒப்புக் கொடுக்கப்பட்டது.

இத் தவக்காலம் எதிர்வரும் மார்ச் மாதம் 29 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரை அனுஸ்டிக்கப்படும். மார்ச் மாதம் 29 ஆம் திகதி புனித பெரிய வெள்ளி அனுஷ்டிக்கப்பட உள்ளது.

அன்று இயேசு கிறிஸ்து பாடுபட்டு மரித்து அடக்கம் செய்யப்பட்ட நாளாகும். இதனை ஒட்டியதாக இன்று முதல் நாற்பது நாட்கள் புனித தவக் காலமாக இயேசு பிரான் அனுபவித்த பாடுகள், மரணம், உயிர்ப்பு ஆகிய மூன்றும் நினைவு கூரப்படும்.

CATEGORIES
TAGS
Share This