சிறீதரனை சந்தித்தார் பிரித்தானிய உயர்ஸ்தானிகர்!
தமிழரசுக்கட்சியின் புதிய தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ள சிறீதரனை இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஆண்ட்ரூ பெட்ரிக் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இந்த சந்திப்புக் குறித்து பிரித்தானிய உயர்ஸ்தானிகர் தனது எக்ஸ் (X) தளத்தில் குறிப்பிட்டுள்ளதாவது,
இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ள சிறீதரனுடனான சந்திப்பு ஒரு பயனுள்ளதாக அமைந்தது.
வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள தமிழ் சமூகத்திற்குள் காணப்படும் முக்கிய விடயங்கள் குறித்து நாம் இருவரும் கலந்துரையாடினோம் என்று குறிப்பிட்டுள்ளார்.
CATEGORIES Uncategorized