ஜெயலலிதா இருந்திருந்தால் இலங்கை தமிழர் பிரச்சனையே இருந்திருக்காது – அய்யநாதன்

ஜெயலலிதா இருந்திருந்தால் இலங்கை தமிழர் பிரச்சனையே இருந்திருக்காது – அய்யநாதன்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதானவர்கள் ஜெயலலிதாவின் ஆட்சி காலத்தில் விடுவிக்கப்பட்டிருந்தால் அவர்களுக்கான நீதி தாமதமின்றி கிடைத்திருக்கும் என மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன் தெரிவித்துள்ளார்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி விடுவிக்கப்பட்டவர்களின் இலங்கை பயணம் தொடர்பில் ஐபிசி தமிழ் ஊடகத்திற்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ராஜீவ் காந்தி கொலை வழக்கு விவகாரத்தை முற்றுமுழுதாக இந்திய ஒன்றிய அரசு கையாளுவதால் தமிழக அரசு இதனுள் தலையிட முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் இந்த வழக்கில் தொடர்புடையவர்கள் இலங்கைக்கு வரலாம் என இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி கூறிய விடயம் முக்கியத்துவம் வாய்ந்தது எனவே அவர்கள் இலங்கைக்கு விரைவில் அனுப்பப்படலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் அவர்கள் இலங்கைக்கு சென்றால் அவர்கள் மீதி சிறிலங்கா அரசு விசாரணைகள் மேற்கொள்ளும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

CATEGORIES
TAGS
Share This