இலங்கையில் கைது செய்யப்பட்ட 22 இந்தியர்கள்!

இலங்கையில் கைது செய்யப்பட்ட 22 இந்தியர்கள்!

இலங்கையில் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்த 22 இந்திய பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இதன்படி மடி கணனிகள் மற்றும் கையடக்கத் தொலைபேசிகளை உபயோகித்து இவர்கள் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்ததாக தலங்கம காவல்துறையினர் குறிப்பிட்டனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து 35 கையடக்க தொலைபேசிகள் மற்றும் ஐந்து மடி கணனிகளையும் உத்தியோகபூர்வ முத்திரை ஒன்றையும் கைப்பற்றியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் எழுதுவினைஞர் ஒருவர், காவல்துறையில் முன் வைத்துள்ள முறைப்பாட்டுக்கு இணங்கவே இவர்கள் கைது செய்யப்பட்டனர்.

தலங்கம நாகஹமுல்ல பிரதேசத்தில் வீடொன்றில் மறைந்திருந்த சந்தர்ப்பத்திலேயே இச்சந்தேக நபர்களை கைது செய்ததாக தலங்கம காவல்துறையினர் தெரிவித்தனர்.

CATEGORIES
TAGS
Share This