நாடளாவிய ரீதியில் 232 வெதுப்பகங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!
நிர்ணயிக்கப்பட்ட எடை மற்றும் விலையை காட்சிப்படுத்தாத சுமார் 232 வெதுப்பகங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.
குறித்த வெதுப்பகங்கள் மற்றும் விற்பனை நிலையங்களுக்கு எதிராக வழக்கு தொடர உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
பாண் தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்ட பின்னர், பெப்ரவரி 5 ஆம் திகதி முதல் 8 ஆம் திகதி வரை நடத்தப்பட்ட சுற்றிவளைப்புக்களி் வெதுப்பகங்கள் மற்றும் விற்பனை நிலையங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
நாடளாவிய ரீதியில் தொடர்ச்சியாக சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக நுகர்வோர் விவகார அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது.
நுகர்வோர்கள் தங்களுக்கு ஏதேனும் முறைப்பாடுகள் இருந்தால், நுகர்வோர் விவகார அதிகாரசபையின் அவசர தொலைபேசி இலக்கமான 1977 க்கு தெரிவிக்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
CATEGORIES Uncategorized