புதிதாக 157 பேருக்கு கொரோனா தொற்று!

புதிதாக 157 பேருக்கு கொரோனா தொற்று!

மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று காலை வெளியிட்டபுள்ளிவிவரம்:

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 157 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. சிகிச்சையில் இருக்கும் கரோனா நோயாளிகள் எண்ணிக்கை 1,496 ஆக பதிவாகியுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றுக்கு சத்தீஸ்கரில் ஒருவரும் உ.பி.யில் ஒருவரும் உயிரிழந்தனர். 2020 முதல் இதுவரை 4.5 கோடிக்கும் மேற்பட்டோர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 4.4 கோடிக்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர். 5.3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் (1.19%) இறந்துள்ளனர். 220.67 கோடிக்கும் மேற்பட்ட கொரோனா தடுப்பூசி டோஸ் செலுத்தப்பட்டுள்ளன. இவ்வாறு புள்ளிவிவரத்தில் கூறப்பட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This