இலங்கை புதிய தலைமைத்துவத்திற்கு மாறவேண்டும் – கர்தினால் மல்கம் ரஞ்சித்

இலங்கை புதிய தலைமைத்துவத்திற்கு மாறவேண்டும் – கர்தினால் மல்கம் ரஞ்சித்

இலங்கை புதிய தலைமைத்துவத்திற்கு மாறவேண்டும் என கர்தினால் மல்கம் ரஞ்சித் அழைப்புவிடுத்துள்ளார்.

சுதந்திரத்தின் பின்னர் சிங்கப்பூரும் இலங்கையும் பின்பற்றிய அணுகுமுறைகளில் உள்ள வித்தியாசங்களை சுட்டிக்காட்டியுள்ள அவர் சிங்கப்பூர் ஐக்கியத்திற்கும் தனது மக்களின் நலனிற்கும் முக்கியத்துவம் கொடுத்தது என தெரிவித்துள்ளதுடன் இலங்கையின் தலைமைத்துவம் மதமொழி அடிப்படையில் சமூகங்களை பிரித்ததை கடுமையாக கண்டித்துள்ளார்.

சிங்கப்பூரின் வலுவான சட்டஅமைப்பினை பாராட்டியுள்ள அவர் அது ஒழுக்கத்திற்கு முக்கியத்துவம் அளிக்கின்றது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் சட்டம் ஒழுங்கு அலட்சியம் செய்யப்படுவதாகவும் கர்தினால் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை அரசாங்கம் சுயநலம் மிக்க நிகழ்ச்சிநிரலை முன்னெடுக்கின்றது தேசத்தின் நலனை விட தனிப்பட்ட நலனிற்கு முன்னுரிமையளிக்கின்றது எனவும் தெரிவித்துள்ள கர்தினால் அரசியல் பொருளாதார நெருக்கடிகள் காணப்படும் சூழ்நிலையில் சுதந்திரதின கொண்டாட்டங்களின் நியாயத்தன்மை குறித்து கேள்வி எழுப்பியுள்ள அவர் அரசாங்கம் தனது சுதந்திரத்தை கொண்டாடுகின்றது எனவும் தெரிவித்துள்ளார்.

தேசம் ஒடுக்குமுறைமிக்க ஆளும்வர்க்கத்தின் பிடியிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ளவேண்டும் எனவும் தெரிவித்துள்ள கர்தினால் நாட்டையும் பல்வேறுபட்ட மக்களையும் நேசிக்கும் தலைவர்களை தெரிவுசெய்யவேண்டும் எனவும் தெரிவித்துள்ள அவர் ஊழல்மிக்க தலைவர்களை வெளியேற்றவேண்டும் புதிய தலைமைத்துவத்தை கொண்டுவரவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This