கைதிகளுக்கு பொதுமன்னிப்பு!

கைதிகளுக்கு பொதுமன்னிப்பு!

இலங்கையின் 76வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு சிறைச்சாலையிலிருந்து 26 கைதிகள் இன்று (04) காலை ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பு சிறைச்சாலை அத்தியட்சகர் என் பிரபாகரன் தலைமையில் இடம்பெற்ற கைதிகள் விடுதலை செய்யப்படும் நிகழ்வில் பிரதம ஜெயிலர் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

சிறு குற்றம் புரிந்த தண்டணைப் பணம் செலுத்தாத கைதிகளே இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இ​தேவேளை, வவுனியா மற்றும் யாழ் சிறைச்சாலையில் இருந்தும் கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர்.

CATEGORIES
TAGS
Share This