தமிழகத்தில் தமிழ் எழுத்துக்களாலான திருவள்ளுவர் சிலை!

தமிழகத்தில் தமிழ் எழுத்துக்களாலான திருவள்ளுவர் சிலை!

தமிழகத்தில் தமிழ் எழுத்துக்களை கொண்டு உருவாக்கப்பட்ட சிலை ஒன்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இச்சிலையானது தொலைக்காணொளி தொழில் நுட்பத்தின் மூலம் கடந்த வெள்ளிக்கிழமை (05.01.2024) திறக்கப்பட்டுள்ளது.

குறித்த சிலை முழுவதும் தமிழ் எழுத்துக்களால் பொறிக்கப்பட்டு, சிலையின் நெற்றிப் பகுதியில் அறம் என்ற சொல் பொறிக்கப்பட்டுள்ளது.

மேலும் சிலையானது 3 தொன் எடையில் 25 அடி உயரம் கொண்டதாக உருக்கு இரும்பினால் அமையப் பெற்றுள்ளது.

ஸ்மார்ட் சிற்றி திட்டத்தின் கீழ் இந்திய மதிப்பில் 52 கோடி ரூபா செலவில் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

CATEGORIES
TAGS
Share This