ஈரானில் 9 பாகிஸ்தான் தொழிலாளர்கள் சுட்டுக்கொலை!

ஈரானில் 9 பாகிஸ்தான் தொழிலாளர்கள் சுட்டுக்கொலை!

ஈரானில் 9 பாகிஸ்தான் தொழிலாளர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரானின் சிஸ்தான்-பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள சரவன் நகரின் சிர்கான் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் நேற்று நுழைந்த அடையாளம் தெரியாத ஆயுதம் ஏந்தியவர்கள் ஈரானியர் அல்லாதவர்களை சுட்டுக்கொன்றனர். இந்த தாக்குதலில் 9 பாகிஸ்தான் தொழிலாளர்கள் பலியாகினர்.

மேலும் மூன்று பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இருப்பினும் இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த ஒரு குழுவும் அல்லது தனி நபரும் உடனடியாக பொறுப்பேற்கவில்லை.

இதனிடையே இந்த தாக்குதல் குறித்து விரிவான விசாரணை நடத்தவும், அதற்கு காரணமானவர்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கவும் பாகிஸ்தான் வெளியுறவு அலுவலகம் கோரிக்கை விடுத்துள்ளது. எல்லை தாண்டிய துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கு இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில் இந்த தாக்குதல் மேலும் பதற்றத்தை அதிகரித்துள்ளது.

CATEGORIES
TAGS
Share This