சுகாதார பணிப்புறக்கணிப்பு இன்றும் தொடர்கின்றது!

சுகாதார பணிப்புறக்கணிப்பு இன்றும் தொடர்கின்றது!

சுகாதார பணிப்புறக்கணிப்பு போராட்டம் இன்றும் (02) தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுவதாக தொழிற்சங்கங்கள் தெரிவிக்கின்றன.

இன்று பிற்பகல் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் கலந்துகொள்ளும் கலந்துரையாடலில் பணிப்புறக்கணிப்பின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என இடைக்கால வைத்திய சேவைகள் கூட்டு முன்னணியின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்தார்.

வைத்தியர்களுக்கு வழங்கப்பட்டு வரும் 30 ஆயிரம் ரூபா கொடுப்பனவை தங்களுக்கும் வழங்குமாறு கோரி 72 சுகாதார சங்கங்கள் ஆரம்பித்துள்ள பணிப்புறக்கணிப்பு காரணமாக நேற்றும் வைத்தியசாலை நடவடிக்கைகளும் முடங்கியமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This