கொழும்பு துறைமுகத்திற்கு வருகை தரும் கப்பல்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

கொழும்பு துறைமுகத்திற்கு வருகை தரும் கப்பல்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

கொழும்பு துறைமுகத்திற்கு வருகை தரும் கப்பல்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக இலங்கை துறைமுக அதிகார சபையின் செயற்பாட்டு பணிப்பாளர் குமார தெரிவித்துள்ளார்.

செங்கடலை அண்மித்த பகுதியில் ஏற்பட்டுள்ள மோதல் சூழ்நிலை காரணமாகவே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வருடத்தின் கடந்த 29 நாட்களில் 330 க்கும் மேற்பட்ட கப்பல்கள் கொழும்பு துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கொள்கலன் நடவடிக்கைகளில் மாற்றம்
அதன்படி, கொழும்பு துறைமுகத்தில் கொள்கலன் நடவடிக்கைகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

கடந்த 29 நாட்களில் துறைமுக அதிகாரசபைக்கு சொந்தமான கொள்கலன் நடவடிக்கைகளின் கொள்ளளவு கடந்த வருடத்தின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 60.9% அதிகரித்துள்ளதாக பணிப்பாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This