வங்கி சட்டத்தில் திருத்தங்களை நிறைவு செய்ய வேண்டும் – பீட்டர் ப்ரூயர்

வங்கி சட்டத்தில் திருத்தங்களை நிறைவு செய்ய வேண்டும் – பீட்டர் ப்ரூயர்

நிதித்துறையின் ஸ்திரத்தன்மையைப் பாதுகாக்கவும், பொருளாதார வளர்ச்சிக்கு ஆதரவளிக்கும் திறனை அதிகரிக்கவும் இலங்கை அதிகாரிகள், சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பு திட்டத்தின் கீழான உறுதிப்பாட்டிற்கு ஏற்ப வங்கி சட்டத்தில் அவசரமாக திருத்தங்களை நிறைவு செய்ய வேண்டும் என சர்வதேச நாணய நிதிய திட்டத்தின் பிரதானி பீட்டர் ப்ரூயர் தெரிவித்துள்ளார்.

மத்திய வங்கியில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம் இலங்கையில் வங்கி மறுமூலதனத் திட்டத்தை செயற்படுத்தி, நிதிக் கண்காணிப்பை வலுப்படுத்த வேண்டும் எனவும் நெருக்கடி முகாமைத்துவ கட்டமைப்பு உருவாக்கப்பட வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

CATEGORIES
TAGS
Share This