மின்சார சபை தொழிற்சங்கங்களுக்கு தடை உத்தரவு!

மின்சார சபை தொழிற்சங்கங்களுக்கு தடை உத்தரவு!

மின்சார சபையின் தொழிற்சங்க தலைவர்கள் குழுவிற்கு எதிராக கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் தடை உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

ரஞ்சன் ஜயலால் உள்ளிட்டோர் இன்று ஜனாதிபதி செயலகம், ஜனாதிபதி மாளிகை, நிதியமைச்சு வளாகம் மற்றும் மத்திய வங்கி வளாகங்களுக்குள் பிரவேசிப்பதை தவிர்க்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மின்சார சபையை தனியார் மயமாக்கும் முயற்சிகள் இடம்பெற்று வருவதாக தெரிவித்து அதன் தொழிற்சங்கங்கள் எதிர்ப்புப் பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ளன.

CATEGORIES
TAGS
Share This