விவசாயிகளின் நம்பிக்கையை மோடி அரசு இழந்துவிட்டது – ராகுல்

விவசாயிகளின் நம்பிக்கையை மோடி அரசு இழந்துவிட்டது – ராகுல்

மத்தியில் ஆட்சியில் உள்ள மோடி அரசு விவசாயிகளின் நம்பிக்கையை இழந்துவிட்டதாகவும், காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் விவசாயிகள் வளர்ச்சி பெறுவார்கள் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

ராகுலின் இந்திய ஒற்றுமை நீதி நடைப்பயணம் பிகாரில் நேற்று காலை நுழைந்துள்ள நிலையில், இரண்டாவது நாளாக அராரியா மாவட்டத்திலிருந்து தனது பயணத்தைத் தொடங்குவதற்கு முன்னதாக மகாத்மா காந்தியின் நினைவு நாளையொட்டி அவரது புகைப்படத்துக்கு ராகுல் காந்தி மரியாதை செலுத்தினார்,

தலையில் கம்சா(துண்டு) அணிந்தபடி காந்தி பூர்ணியா மாவட்டத்தில் கூடியிருந்த நூற்றுக்கணக்கான விவசாயிகளுடன் ராகுல் கலந்துரையாடினார். அவர்களின் பிரச்னைகளையும் கேட்டறிந்தார்.

விவசாயிகளின் அச்சத்தைப் போக்க மோடி அரசு தவறிவிட்டது. எங்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுத்தால், விவசாயிகளின் நம்பிக்கையை மீண்டும் மீட்டெடுக்க முயற்சிப்போம் என்று அவர் கூறினார்.

CATEGORIES
TAGS
Share This