சென்னை விமானநிலையத்தில் சுங்கத் துறை அதிகாரிகள் 40 பேர் மாற்றம்!

சென்னை விமானநிலையத்தில் சுங்கத் துறை அதிகாரிகள் 40 பேர் மாற்றம்!

சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் சுங்கத் துறை அதிகாரிகள் 40 பேர்
அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். நாற்பது அதிகாரிகளும் கடந்த இரண்டு ஆண்டுகளாக பணிபுரிந்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது மத்திய நிதி அமைச்சக உத்தரவின் பேரில் அதிரடியாக பல்வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். புதிதாக நியமிக்கப்பட்ட 40 அதிகாரிகள் இன்று (30) சென்னை பன்னாட்டு விமான நிலையம் வந்தனர்.

இவர்கள் பணியாற்றும் இடம், பயணிகளைக் கையாளுவது மற்றும் புறப்பாடு பகுதியில் வருகைப் பகுதியில் எவ்வித சோதனைகள் செய்தல் உள்ளிட்டவை உயர் அதிகாரிகள் மூலம் அறிவுறுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1ஆம் தேதியே 40 அதிகாரிகளும் பதவி ஏற்பார்கள் என்றும் 40 அதிகாரிகளுக்கும் மத்திய விமான பாதுகாப்பு படை அலுவலகம் தற்காலிக பாஸ் வழங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

CATEGORIES
TAGS
Share This