செந்தில் பாலாஜி பிணை மனு- அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவு!

செந்தில் பாலாஜி பிணை மனு- அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவு!

பிணை கோரிய அமைச்சர் செந்தில் பாலாஜியின் 2வது மனு மீது அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், செந்தில் பாலாஜி மனு மீதான விசாரணை பெப்ரவரி 14ம் திகதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே விசாரணையின்போது, 230 நாட்களுக்கும் மேல் சிறையில் உள்ள அமைச்சர் இன்னும் பதவியில் நீடிப்பதன் மூலம் என்ன கருத்தை சமூகத்திற்கு சொல்கிறீர்கள்? என நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கேள்வி எழுப்பினார்.

கடைநிலை ஊழியர் 48 மணி நேரம் சிறையில் இருந்தால் பதவிநீக்கம் செய்யப்படுகிறாரே? என்றும் நீதிமன்றம் கேட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This