சமூக ஊடக ஆர்வலர் பியத் நிகேஷல, புலனாய்வுப் பிரிவினரால் கைது!

சமூக ஊடக ஆர்வலர் பியத் நிகேஷல, புலனாய்வுப் பிரிவினரால் கைது!

சமூக ஊடக செயற்பாட்டாளர் பியத் நிகேஷலா குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் மற்றும் மற்றொரு சமூக ஊடக ஆர்வலர் தனது யூடியூப் செனலுக்காக பதிவு செய்த தொலைபேசி உரையாடலை , அவரது யூடியூப் செனலில் பகிர்ந்தமை தொடர்பான வாக்குமூலத்திற்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு அழைக்கப்பட்டதை அடுத்து, அங்கு சென்ற அவர் கைது செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

ஜூலை 09, 2022 அன்று கொழும்பில் உள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வீடு எரிக்கப்பட்டதை சமூக ஊடகங்களில் நேரடியாக ஒளிபரப்பியதற்காக பியத் நிகேஷல கடந்த ஆண்டு ஜூன் மாதம் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This