இந்திய கடற்தொழிலாளர்கள் நிபந்தனையுடன் விடுவிப்பு!

இந்திய கடற்தொழிலாளர்கள் நிபந்தனையுடன் விடுவிப்பு!

இலங்கைக் கடற்பரப்புக்குள் எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட12 இந்திய கடற்தொழிலாளர்கள் நிபந்தனைகளுடன் நேற்று விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இந்திய கடற்தொழிலாளர்கள் 12 பேரையும் ஊர்காவற்றுறை நீதிவான் ஜே.கஜநிதிபாலன் முன்னிலையில் யாழ். மாவட்ட கடற்றொழில் திணைக்கள அதிகாரிகள் முன்னிலைப்படுத்தினர்.

கடற்தொழிலாளர்களுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட மூன்று குற்றச்சாட்டுகளுக்கும் தலா ஆறு மாதங்கள் சிறைத்தண்டனை என்ற ரீதியில் ஐந்து வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 18 மாத சிறைத்தண்டனை விதித்து நீதிவான் உத்தரவிட்டுள்ளார். 

CATEGORIES
TAGS
Share This