தமிழக கடற்தொழிலாளர்கள் 6 பேர் கைது!

தமிழக கடற்தொழிலாளர்கள் 6 பேர் கைது!

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 6 தமிழக கடற்தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடற்படையினர் நேற்றிரவு முன்னெடுத்த சோதனையின் போது, நெடுந்தீவு கடற்பரப்பில் வைத்து குறித்த கடற்தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படை பேச்சாளர் எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார்.

கைதானவர்கள் காங்கேசன்துறை துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டு கடற்றொழில் திணைக்களத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இதன்போது, அவர்கள் பயணித்த இரண்டு படகுகளும் கையகப்படுத்தப்பட்டுள்ளதாக கடற்படை பேச்சாளர் குறிப்பிட்டார்.

CATEGORIES
TAGS
Share This