இந்திய குடியரசு தினவிழா: டெல்லியில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி!
இந்தியாவின் 75ஆவது குடியரசு தினவிழா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து டெல்லி கடமைப்பாதையில் ஜனாதிபதி திரவுபதி முர்மு கொடியேற்றினார். 21 பீரங்கி குண்டுகள் முழங்க கொடியேற்றிய நிலையில், அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.
முன்னதாக கொடியேற்றும் இடத்திற்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரான்ஸ் அதிபர் மேக்ரானுடன் வருகைத் தந்தார். அவர்களை பிரதமர் மோடி, பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் வரவேற்றனர்.
தலைமை சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டுள்ள பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மேக்ரானுக்கு அதிகாரிகளை பிரதமர் மோடி அறிமுகப்படுத்தினார். பின்னர் ஜனாதிபதி திரவுபதி முர்மு கொடியேற்றினார். அதனைத் தொடர்ந்து அணிவகுப்பு நடைபெற்று வருகிறது.
CATEGORIES Uncategorized