முன்னாள் ஜனாதிபதி மைத்திரி மகள் வீட்டில் கொள்ளை!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரி மகள் வீட்டில் கொள்ளை!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மகளின் வீட்டிலிருந்து பெறுமதி வாய்ந்த பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

பத்தரமுல்லை விக்ரமசிங்கபுர பிரதேசத்தில் அமைந்துள்ள குறித்த வீட்டில் யாரும் இல்லாத நிலையில் கதவு உடைக்கப்பட்டு இந்த திருட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதனையடுத்து சம்பவம் தொடர்பில் தலங்கம காவல்துறையினருக்கு பாதிக்கப்பட்ட நபர்களால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இச் சம்பவத்தில் சுமார் 30 இலட்சம் மதிப்புள்ள பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

வீட்டில் இருந்த 150,000 ரூபா பெறுமதியான பணம், தங்கத்தினால் செய்யப்பட்ட ஒட்டக சிலை, கைக்கடிக்காரம், 8 சிங்கப்பூர் தங்க நாணயங்கள் உள்ளிட்ட பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

CATEGORIES
TAGS
Share This