பிரச்சாரக் காலம் நிறைவடைந்தும் நடத்தப்பட்ட கூட்டங்கள்: சுட்டிக்காட்டிய பெப்ரல் அமைப்பு

பிரச்சாரக் காலம் நிறைவடைந்தும் நடத்தப்பட்ட கூட்டங்கள்: சுட்டிக்காட்டிய பெப்ரல் அமைப்பு

ஜனாதிபதித் தேர்தலுக்கான தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் (19) நள்ளிரவு 12 மணியுடன் நிறைவடைந்த போதிலும் அம்பாறை மாவட்டத்தில் இரண்டுமணிவரை பிரச்சார கூட்டங்கள் சில இடம்பெற்றதாக தேர்தல் கண்காணிப்பு பெப்ரல் அமைப்பின் மாவட்ட இணைப்பாளர் கந்தையா சத்தியநாதன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு பெவஸ்ஒப் ஊடக கற்கை நிலையத்தில் வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனைக் கூறினார்.

இந்த சம்பவம் குறித்து தலைமைகாரியாலயத்துக்கும், சுவரொட்டிகள் அகற்றப்படாதுள்ளமை தொடர்பாக பிரதி பொலிஸ் மா அதிபருக்கு அறிவித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,

“அம்பாறை மாவட்டத்தில் தேர்தல் விதிமீறல்கள் குறித்து இதுவரை 11 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

மாவட்டத்திலுள்ள 115 வாக்களிப்பு நிலையங்களில் 115 நிலைகொள் கண்காணிப்பாளர்களையும் 16 நடமாடும் கண்காணிப்பாளர்களையும் தேர்தல் தொகுதியொன்றுக்கு ஒருவாகன வீதம் 04 தொகுதியிலும் 04 வாகனங்களில் கண்காணிப்பில் ஈடுபடவுள்ளதுடன் வாக்கு கணக்கெடுப்பு நிலையத்தில் 10 கண்காணிப்பாளர்கள், கச்சேரியிலிருந்து வாக்கு எண்ண ஆரம்பிக்கும் சந்தர்ப்பத்திலிருந்து வாக்கு எண்ணிமுடியும்வரை கண்காணிப்பில் இருப்பார்கள்.

அதேவேளை இந்த முறை இரண்டாவது விருப்பு வாக்கு எண்ணவேண்டிய தேவை ஏற்படுமாயின் 15 மணித்தியாலம் தங்கியிருந்து கண்காணிப்பாளர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள்.

அதேபோன்று நீண்டநாள் கண்காணிப்பாளர்கள் நால்வர் நியமிக்கப்பட்டு அவர்கள் மறைமுகமாக கண்காணிப்பில் ஈடுபடுவார்கள் என்பதுடன் வேட்பாளர்களின் நிதி செலவு தொடர்பாக ஆராய்வதற்கு மூவரை நியமித்துள்ளோம்.

கடந்த ஜனாதிபதி தேர்தலை விட இந்த வருடம் குறைவான முறைப்பாடுளே கிடைக்கப்பெற்றுள்ளன. தற்போதைய தேர்தல் சட்ட விதிகளின்படி வாக்குசாவடிகளுக்குள் முகவர்கள், கண்காணிப்பாளர்கள் மற்றும் அந்த வாக்குசாவடிகளில் பணியாற்றும் பொலிசார், அதிகாரிகள் உத்தியோகத்தர்கள் மட்டும்தான் உள்நுழையமுடியும்” என்றார்.

CATEGORIES
Share This