நாட்டில் மேலும் 987 சந்தேக நபர்கள் கைது!

நாட்டில் மேலும் 987 சந்தேக நபர்கள் கைது!

யுக்திய நடவடிக்கையின் கீழ் இன்று (21) காலை முடிவடைந்த 24 மணித்தியாலங்களில் 987 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதில் போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய 663 சந்தேக நபர்களும், குற்றப் பிரிவுக்கு அனுப்பப்பட்ட பட்டியலில் இருந்த 324 சந்தேக நபர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பில் கைது செய்யப்பட்ட 638 சந்தேக நபர்களில் 12 சந்தேகநபர்கள் தடுப்பு காவல் உத்தரவின் பேரில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், 05 சொத்து விசாரணைகள் மற்றும் போதைக்கு அடிமையான 14 பேர் புனர்வாழ்விற்காக அனுப்பப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு மற்றும் பொலிஸ் விசேட பணியகம் ஆகியவற்றின் பட்டியலில் இருந்த 14 சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், குற்றப் பிரிவுக்கு அனுப்பப்பட்ட பட்டியலில் இருந்து கைது செய்யப்பட்ட 324 சந்தேக நபர்களில் 90 சந்தேகநபர்கள் போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பான திறந்த பிடியாணைகளையும், 222 பேர் போதைப்பொருள் அல்லாத குற்றங்கள் தொடர்பான திறந்த பிடியாணைகளையும் பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைரேகைகள் மூலம் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்படாதிருந்த 11 சந்தேகநபர்களும், பல்வேறு குற்றச் செயல்களுக்காக தேடப்பட்டு வந்த சந்தேகநபர் ஒருவரும் இந்த நடவடிக்கைகளில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

CATEGORIES
TAGS
Share This