தடையை மீறி விளம்பரம்: பதஞ்சலிக்கு எச்சரிக்கை விடுத்த உச்சநீதிமன்றம்!

தடையை மீறி விளம்பரம்: பதஞ்சலிக்கு எச்சரிக்கை விடுத்த உச்சநீதிமன்றம்!

ஆயுர்வேத பல்பொடி, சோப்பு, எண்ணெய் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை பதஞ்சலி நிறுவனம் தயாரித்து விற்பனை செய்கிறது. நவீன மருந்துகளுக்கு எதிராக பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனம் விளம்பரம் செய்து வந்தது.

இதற்கிடையே, பதஞ்சலி நிறுவனத்தின் தவறான விளம்பரங்கள் குறித்து இந்திய மருத்துவ சங்கம் உச்ச நீதிமன்றில் மனு தாக்கல் செய்தது. அந்த மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்றில் விசாரணைக்கு வந்தது. அப்போது அலோபதி மருந்துகளை குறிவைத்து தவறான விளம்பரங்களை வெளியிட்டதற்காக பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனத்திற்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்தது.

தவறான விளம்பரங்கள் நீடித்தால் ரூ.1 கோடி அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தது.

இந்நிலையில், உச்சநீதிமன்ற உத்தரவை மீறி பதஞ்சலி நிறுவனம் அலோபதி மருந்துகளுக்கு எதிராக விளம்பரங்களை வெளியிடுவதாக இந்திய மருத்துவ சங்கம் உச்ச நீதிமன்றில் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கை விசாரித்த உச்சநீமிமன்றமட பதஞ்சலி நிறுவனத்துக்கு மீண்டும் எச்சரிக்கை விடுத்ததுடன், பதஞ்சலி நிறுவனங்களுக்கு எதிராக கடுமையான உத்தரவுகளை பிறப்பிக்க நேரிடும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

CATEGORIES
TAGS
Share This