இலங்கை தமிழரசு கட்சியின் புதிய தலைவருக்கான இரகசிய வாக்கெடுப்பு இன்று!

இலங்கை தமிழரசு கட்சியின் புதிய தலைவருக்கான இரகசிய வாக்கெடுப்பு இன்று!

இலங்கை தமிழரசு கட்சியின் புதிய தலைவரை தெரிவு செய்வதற்கான இரகசிய வாக்கெடுப்பு திருகோணமலையில் இன்று காலை இடம்பெறவுள்ளது.

இதன்படி, இலங்கை தமிழரசு கட்சியின் பொது சபை உறுப்பினர்கள் 340 பேரும் இன்றைய தினம் வாக்களிக்கவுள்ளனர்.

இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் பதவிக்காக நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், சிவஞானம் ஸ்ரீதரன் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சீனிதம்பி யோகேஸ்வரன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

இந்தநிலையில், இன்று இடம்பெறும் இரகசிய வாக்கெடுப்பின் முடிவுகளுக்கமைய தெரிவாகும் புதிய தலைவர் எதிர்வரும் 28ஆம் திகதி இடம்பெறும் கட்சியின் தேசிய மாநாட்டின்போது உத்தியோகபூர்வமாக தமது கடமைகளைபொறுப்பேற்பார் என இலங்கை தமிழரசு கட்சியின் பொதுச்செயலாளர் பத்மநாதன் சத்தியலிங்கம் எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார்.

CATEGORIES
TAGS
Share This