பாதுகாப்பு படை உறுப்பினர்கள் கொல்லப்பட்டமைக்கு பதில் தாக்குதல் நடத்தப்படும் – ஈரான்

பாதுகாப்பு படை உறுப்பினர்கள் கொல்லப்பட்டமைக்கு பதில் தாக்குதல் நடத்தப்படும் – ஈரான்

ஈரானிய பாதுகாப்பு படை உறுப்பினர்கள் ஐந்து பேர் சிரியாவின் தலைநகரில் வைத்து நேற்று கொல்லப்பட்டமைக்கு பதில் தாக்குதல் நடத்தப்படும் என ஈரான் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

குறித்த தாக்குதலுக்கு இஸ்ரேல் தான் காரணம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஈரான் ஜனாதிபதி தமது உத்தியோகபூர்வ இணையத்தள பக்கத்தில் உயிரிழந்த பாதுகாப்பு படை உறுப்பினர்களுக்கு இரங்கலை குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், குறித்த தாக்குதலுக்கு ஈரானின் வெளியுறவு அமைச்சகமும் அதிருப்தி வெளியிட்டுள்ளது.

நேற்று சிரியாவின் தலைநகரில் நடத்தப்பட்ட வான்வழித்தாக்குதல் தென்மேற்கு டமாஸ்கஸ், இராணுவ விமான நிலையம் மற்றும் டமாஸ்கஸில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகம் போன்ற இடங்களில் நடத்தப்பட்டுள்ளன.

CATEGORIES
TAGS
Share This