நாகாலாந்தை சென்றடைந்த ராகுல் காந்தியின் நடைபயணம்!

நாகாலாந்தை சென்றடைந்த ராகுல் காந்தியின் நடைபயணம்!

மணிப்பூர் எல்லையில் உள்ள கோஹிமா மாவட்டத்தில் உள்ள குசாமா கிராமத்திற்கு ராகுல் காந்தி தனது கட்சி உறுப்பினர்களுடன் வருகை தந்தார். இந்த யாத்திரையை மணிப்பூர் மாநிலம் தவு பாலில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

தனது பயணத்தின்போது, நாகா கோகோ உள்ளிட்ட நாகா பழங்குடி அமைப்புகள், சிவில் சமூகக் குழுக்கள் மற்றும் தேவாலய அமைப்புகளுடன் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து ராகுல் காந்தி பேச்சுவார்த்தை நடத்துவார் என்று மாநில காங்கிரஸ் செயல் தலைவர் கிரிடி தியுனுவோ தெரிவித்தார்.

ஜனவரி 18ஆம் திகதியன்று அசாமில் நுழைவதற்கு முன்பு ராகுல் காந்தி மாநிலத்தில் குறைந்தது 5 மாவட்டங்கள் வழியாக பயணிப்பார். இன்று (16), விஸ்வேமா கிராமத்தில் இருந்து நாகாலாந்து யாத்திரையைத் தொடங்கும் அவர், தலைநகரை அடைந்ததும், இரண்டாம் உலகப்போர் கல்லறையில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்துவார்.

இந்திய ஒற்றுமை நீதி நடைபயணம் 15 மாநிலங்களில் உள்ள 100 மக்களவைத் தொகுதிகள் வழியாக செல்லும். இது 6,713 கி.மீ தூரம், பெரும்பாலும் பஸ்களில் மட்டுமல்லாமல் நடந்தே பயணித்து, மார்ச் 20 அல்லது 21 அன்று மும்பையில் முடிவடையும்.

CATEGORIES
TAGS
Share This