ராகுல் காந்தி யாத்திரைக்கு நிபந்தனையுடன் அனுமதி!

ராகுல் காந்தி யாத்திரைக்கு நிபந்தனையுடன் அனுமதி!

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஜனவரி 14ஆம் திகதி மணிப்பூரில் இருந்து இந்திய ஒற்றுமை நீதிக்கான யாத்திரை தொடங்க திட்டமிட்டிருந்தார்.

ஆனால், ராகுல் காந்தி யாத்திரைக்கு பாதுகாப்பு உள்ளிட்ட காரணம் காரணமாக மணிப்பூர் அரசு தொடர்ந்து அனுமதி மறுத்து வந்தது.

ராகுல் காந்தியின் யாத்திரைக்கு அம்மாநில முதல்வர் பைரன் சிங் அனுமதி தரவில்லை என மணிப்பூர் மாநில காங்கிரஸ் தலைவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், மணிப்பூரில் ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை நீதிக்கான யாத்திரையை மேற்கொள்ள மணிப்பூர் மாநில அரசு அனுமதி அளித்தது.

குறிப்பிட்ட பங்கேற்பாளர்களுடன் மட்டுமே யாத்திரை மேற்கொள்ள வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், பொதுக் கூட்டங்கள் நடத்த அனுமதி இல்லை எனவும் மணிப்பூர் மாநில அரசு நிபந்தனை விதித்துள்ளது.

CATEGORIES
TAGS
Share This