பிரித்தானியப் பிரதமருடன் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சந்திப்பு!
இந்திய மத்திய பாதுகாப்புத்துறை அmமைச்சர் ராஜ்நாத் சிங் 3 நாட்கள் சுற்றுப்பயணமாக பிரித்தானியா சென்றுள்ளார். கடந்த 8ஆம் திகதி பிரித்தானியா சென்றடைந்த ராஜ்நாத் சிங், லண்டனில் உள்ள மகாத்மா காந்தி, அம்பேத்கர் நினைவிடங்களுக்குச் சென்று மரியாதை செலுத்தினார்.
இந்தப் பயணத்தின்போது பிரித்தானிய இராணுவ அமைச்சர் கிராண்ட் ஷாப்ஸை சந்தித்து ராஜ்நாத் சிங் பேச்சுவார்த்தை நடத்தினார். இரு நாடுகளுக்கிடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பு, இராணுவ தளவாடங்கள் உற்பத்தி, தொழில்துறை ஒத்துழைப்பு ஆகியவை குறித்து பேச்சுவார்த்தை நடத்தியதாக தெரிவிக்கப்பட்டது.
மேலும், இந்தியா-பிரித்தானிய உறவுகளை மேம்படுத்துவது, இரு நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பை ஆழமாக்குவது குறித்து பிரித்தானிய வெளியுறவுச் செயலர் டேவிட் கேமரூனுடன், ராஜ்நாத் சிங் ஆலோசனை நடத்தினார்.
இந்நிலையில், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பிரித்தானியப் பிரதமர் ரிஷி சுனக்கை நேரில் சந்தித்து அவருடன் கலந்துரையாடினார்.
கடந்த 22 ஆண்டுகளில் இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ஒருவர் பிரித்தானியா செல்வது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.