தொலைக்காட்சி கலையகத்துக்குள் நுழைந்து அச்சுறுத்திய ஆயுததாரிகள்!

தொலைக்காட்சி கலையகத்துக்குள் நுழைந்து அச்சுறுத்திய ஆயுததாரிகள்!

ஈக்குவடோரில் உள்ள தொலைக்காட்சி கலையகத்துக்குள் நுழைந்த ஆயுதங்களை ஏந்திய குழுவொன்று அங்குள்ள ஊழியர்களை அச்சுறுத்தி – நேரலையை இடைநிறுத்திய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

ஈக்குவடோரின் – குவாயாகில் நகரில் உள்ள தொலைக்காட்சி சேவை ஒன்று ஆயுததாரிகளின் அச்சுறுத்தலை அடுத்து நேற்று இடைநிறுத்தப்பட்டுள்ளது.

அந்த நாட்டிலுள்ள சிறைச்சாலையில் இருந்து பல்வேறு குற்றங்களுடன் தொடர்புடைய முக்கிய குற்றவாளி ஒருவர் தப்பிச் சென்றுள்ள நிலையில் அங்கு 60 நாட்களுக்கு அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

பொது இடங்களில் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தநிலையில் குறித்த தொலைக்காட்சி நிலையத்தில் இருந்த ஊழியர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக ஈக்குவடோர் காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.

அத்துடன் பலர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

CATEGORIES
TAGS
Share This