இடைத்தேர்தலில் தோல்வி: கனடா பிரதமருக்கு நெருக்கடி

இடைத்தேர்தலில் தோல்வி: கனடா பிரதமருக்கு நெருக்கடி

இடைத்தேர்தலில் தோல்வி அடைந்ததை தொடர்ந்து கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் ஆளும் லிபரல் கட்சிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

கனடா நாட்டில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான லிபரல் கட்சி ஆட்சி நடக்கிறது. கூட்டணியில் இருந்த கட்சி ஆதரவை வாபஸ் பெற்றதைத் தொடர்ந்து, தற்போது பெரும்பான்மையற்ற அரசாக செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில், அடுத்தடுத்து நடந்த இரண்டு இடைத்தேர்தல்களில் ஆளும் லிபரல் கட்சி தோல்வியை தழுவியுள்ளது.

ஏற்கனவே, ஜூன் மாதம் நடைபெற்ற டொரண்டோ இடைத்தேர்தலில் வெற்றியை பறிகொடுத்தனர்.

தற்போது, மாண்ட்ரியல் தொகுதிக்கு கடந்த திங்களன்று தேர்தல் நடந்தது. இதில் ஆளும் கட்சியான லிபரல் கட்சி வேட்பாளர் லாரா பாலெஸ்டினிக்கு 27.2% ஓட்டுக்களும், ப்ளோக் குயிபிகோய்ஸ் வேட்பாளர் லுாயிஸ்-பிலிப்பி சாவ் 28 சதவீத ஓட்டுகளும் பெற்றனர். இதில் லுாயிஸ்-பிலிப்பி வெற்றி பெற்றார்.

தேர்தல் முடிவுகள் குறித்து ட்ருடோ கூறுகையில், நாங்கள் வெற்றி பெறாமல் இருக்கலாம். ஆனால் இன்னும் நிறைய வேலைகள் உள்ளன, அதைச்செய்வதில் கவனம் செலுத்தபோகிறோம்,’ என்றார்.

கனடாவில் ஒன்பது ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் ட்ரூடோவின் லிபரல் கட்சியின் பலம் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
Share This