இந்தியா முழுவதும் 475 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!
மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது:
நாடு முழுவதும் 24 மணி நேரத்தில் புதிதாக 475 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கொரோனா சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 3,919 ஆக உள்ளது. கொரோனாவுக்கு கர்நாடகாவில் 3 பேர், சத்தீஸ்கரில் 2 பேர், அசாமில் ஒருவர் என 6 பேர் இறந்துள்ளனர். இதனால் கொரோனா மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 5,33,302-ஆக அதிகரித்துள்ளது. இறப்பு வீதம் 1.19 சதவீதமாக உள்ளது.
தற்போதைய கொரோனா பாதிப்பு, அபாய அளவில் இல்லாததால், மக்கள் யாரும் பீதியடையத் தேவையில்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
CATEGORIES Uncategorized