நாய் இறைச்சிக்கு தடை விதிக்கும் சட்டம்: தென்கொரிய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்!

நாய் இறைச்சிக்கு தடை விதிக்கும் சட்டம்: தென்கொரிய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்!

தென்கொரியாவில் நாய்களை உணவுக்காக கொல்லும் நடைமுறை உள்ளது. நாய் இறைச்சிக்கு தடை விதிக்க வேண்டும் என்று விலங்கு நல ஆர்வலர்கள் கோரிக்கை வைத்து வந்தனர்.

இந்நிலையில், நாய் இறைச்சிக்கு தடை விதிக்க வகை செய்யும் சட்ட வரைபு தென்கொரிய நாடாளுமன்றத்தில் நேற்று ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இதன்படி, நாய் இறைச்சி விற்பனை செய்வது தண்டனைக்குரிய குற்றமாகும். உணவுக்காக நாயை கொன்றால், மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் 23,000 டொலர் வரை அபராதமும் விதிக்கப்படும். நாய் இறைச்சி விநியோகம் செய்தால் 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் 15,000 டொலர் அபராதமும் விதிக்கப்படும்.

எனினும், இந்தச் சட்டம் 2027-ம் ஆண்டு முதல் நடைமுறைக்கு வர உள்ளது. நாய் இறைச்சி விற்பனையில் ஈடுபடுபவர்கள் வேறு வேலைக்கு மாறுவதற்காக 3 ஆண்டு அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This