இன்றைய ராசிபலன் – 10.01.2024

இன்றைய ராசிபலன் – 10.01.2024

மேஷம்: பழைய நண்பர்கள் மூலம் உதவியுண்டு. குடும்பத்தினரின் விருப்பத்தை நிறைவேற்றுவீர். பிள்ளைகளின் சாதனைகளால் அந்தஸ்து உயரும். வியாபாரத்தில் வாராக்கடன் என்றிருந்த பழைய பாக்கிகள் வரும்.

ரிஷபம்: புதிய முயற்சிகள் தடைபடும். குடும்பத்தில் நிதானமாக பேசுங்கள். சகோதரர்களுடன் மனவருத்தம் வரும். பணப் பற்றாக்குறை ஏற்படும். மின்சார சாதனங்களை கவனமாக கையாளவும். கலை பொருட்கள் சேரும்.

மிதுனம்: முக்கிய பிரமுகர்களின் உதவி கிடைக்கும். குடும்பத்தினரின் விருப்பங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பீர்கள். அழகு சாதன பொருட்கள் வாங்குவீர்கள். அலுவலக பணிகளை விரைந்து முடித்து பாராட்டு பெறுவீர்.

கடகம்: உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் உங்கள் மதிப்பு உயரும். பிள்ளைகளால் மன நிம்மதி கிட்டும். பூர்வீக சொத்திலிருந்த வில்லங்கம் விலகும். பிள்ளைகளின் வருங்காலத்துக்கான முக்கிய முடிவுகளை எடுப்பீர்.

சிம்மம்: குடும்பத்தினருடன் மனம் விட்டு பேசுவீர்கள். சேமிப்புகள் அதிகரிக்கும். மனைவிவழி உறவினர்கள் மத்தியில் மதிப்பு, மரியாதை கூடும். குல தெய்வப் பிராத்தனைகளை நிறைவேற்றுவீர். வியாபாரம் திருப்தி தரும்.

கன்னி: மனதில் இருந்த பயம் விலகும். பணவரவு திருப்தி தரும். துணிச்சலுடன் சில முடிவுகளை எடுப்பீர். அலைச்சல் தந்த வேலைகளை உடனே முடிப்பீர். கணவன் – மனைவிக்குள் அனுசரித்து போவதால் நன்மை ஏற்படும்.

துலாம்: வீண் செலவுகளை கட்டுப்படுத்துவீர். அதிரடி திட்டங்களை தீட்டுவீர். உங்களை தேடி வந்து சிலர் உதவி கேட்பர். முக்கிய பிரமுகர்களால் ஆதாயம் உண்டு. ஆன்மிகவாதிகளின் சந்திப்பு நிகழும். பணவரவு திருப்தி தரும்.

விருச்சிகம்: உங்களின் குறிக்கோளை எட்டிப் பிடிக்க முயற்சிப்பீர்கள். புது ஆடை, ஆபரணங்கள் சேரும். விருந்தினர் வருகையால், குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

தனுசு: வியாபாரத்தில் புதிய பங்குதாரர், புதிய முதலீடுகளை தவிர்க்கவும். பண விஷயத்திலும், குடும்ப விஷயத்திலும் நிதானத்தை கடைபிடியுங்கள். நினைத்த காரியம் தாமதமாகும். வீண் அலைச்சல், செலவுகள் இருக்கும்.

மகரம்: தடைபட்டு வந்த காரியங்கள் அனைத்தும் இன்று சுமுகமாக முடியும். குழப்பங்கள் நீங்கி கணவன் – மனைவிக்குள் நெருக்கம் அதிகமாகும். சொந்தம் – பந்தங்களுக்கு மத்தியில் மதிப்பு, மரியாதை கூடும்.

கும்பம்: பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். குடும்பத்தில் தடைபட்ட சுபநிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். அரசு விஷயங்கள் சாதகமாக முடியும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். தொல்லை தந்த வாகனம் சீராகும்.

மீனம்: குடும்பத்தில் அமைதி நிலவும். நட்பு வட்டாரம் விரியும். கடன் பிரச்சினைகளுக்கு மாற்றுவழி காண்பீர். ஈகோ பிரச்சினை தீர்ந்து தம்பதிக்குள் அன்யோன்யம் பிறக்கும். அலுவலகத்தில் உயரதிகாரி நேசக்கரம் நீட்டுவார்.

CATEGORIES
TAGS
Share This