சட்டத்தரணி தவராசாவின் கோரிக்கையை ஏற்று 17 பேரையும் விடுவித்த யாழ்ப்பாண நீதிமன்றம்!

சட்டத்தரணி தவராசாவின் கோரிக்கையை ஏற்று 17 பேரையும் விடுவித்த யாழ்ப்பாண நீதிமன்றம்!

2023 ஆம் ஆண்டு இலங்கையின் சுதந்திர தினத்தின் போது  ஜனாதிபதி யாழ்ப்பாண மாவட்டத்திற்கு வரும் போது அதற்கு எதிராக எதிர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்தமை, தெற்கில் இருந்து பொலிகண்டி வரையான கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்ட இரு குற்றச்சாட்டின் அடிப்படையில்  பொலிஸாரினால் வழக்கு தாக்கல் செய்யப்பட்ட 17  நபர்களை நேற்று  யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் விடுதலை செய்தது.

குறித்த வழக்கானது நேற்று  யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தின் நீதிபதி ஏ.ஆனந்தராஜா முன்னிலையில் எடுத்துக் கொண்டபோதே இவ் வழக்கு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

குறித்த மன்றில் ஆயராகிய தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களாகிய சாள்ஸ் நிர்மில நாதன், செல்வம் அடைக்கலநாதன், சி.சிறிதரன், சிவில் அமைப்பினர்கள், வேலன் சுவாமிகள், சட்டத்தரணி வி.மணிவண்ணன் ஆகியோர்கள் நீதிவான் நீதிமன்றில் ஆயராகியிருந்தனர்.

குறித்த வழக்கில் சட்டத்தரணியாக மன்றில் ஆயராகிய ஜனாதிபதி சட்டத்தரணி கே.டி.தவராஜா உடன் இருந்தார்.இது தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், பொலிஸாரின் மேலதிக விசாரணைக்காக சட்டமா திணைக்களத்தின் ஆலோசனை பெறவுள்ளதாக மன்றில்  பொஸிஸார் கூறியிருந்தனர். அதற்கான விண்ணப்பம் ஒன்றினை மன்றில் நான் சட்டத்தரணியாக சமர்ப்பித்திருந்தேன்.

இந்த வழக்கில் ஈட்டு அனைவரையும் விடுதலை செய்யுமாறு விண்ணப்பம் செய்து இருந்தேன். அதனை கேட்ட யாழ்ப்பாண நீதிவான் நீதிமன்றத்தின் நீதிபதி ஏ.ஆனந்தராஜா வழக்கினை கிடப்பில் போட்டு சகலரையும் விடுதலையாக்கினார் – என்றார்.

CATEGORIES
TAGS
Share This