மாவீரர் தினத்தை சமூக வலைத்தளங்கள் ஊடாக பிரசாரம் செய்த 3 பேர் சிஐடி யினரால் கைது
தமிழீழ விடுதலைப் புலிகளின் மாவீரர் தினத்தை முன்னிட்டு முகநூல் மற்றும் சமூக வலைத்தளங்கள் ஊடாக பிரசாரம் செய்து பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் மருதானை, சுன்னாகம், பத்தேகம பிரதேசங்களைச் சேர்ந்த 28,35,45 வயதுடைய மூன்று சந்தேக நபர்களை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
பொலிஸ் ஊடகப் பிரிவு ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.அதில்,
நாட்டில் தடைசெய்யப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளையும் கடந்த வருடங்களில் மாவீரர் நாள் கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட பழைய காணொளிகள்,புகைப்படங்களை சந்தேகநபர்கள் இந்த வருடத்தின் கொண்டாட்டங்கள் எனக் கூறி முகநூல் மற்றும் சமூக வலைத்தள கணக்கின் ஊடாக பகிரந்து பரப்பியுள்ள குற்றச்சாட்டிலேயே கைது செய்யப்பட்டுள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பாக குற்றப் புலனாய்வு திணைக்களம் மற்றும் பயங்கரவாத புலனாய்வு பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.