EPAPER
மயிலத்தமடு மேய்ச்சல் தரை விவகாரத்துக்கு முற்றுப்புள்ளி வைப்பதாக சஜித் சூளுரை

மயிலத்தமடு மேய்ச்சல் தரை விவகாரத்துக்கு முற்றுப்புள்ளி வைப்பதாக சஜித் சூளுரை

மட்டக்களப்பு மயிலத்தமடு பண்ணையாளர்களின் மேய்ச்சல் தரை பிரச்சனைக்கு உரிய தீர்வைப் பெற்று தருவதாக எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் நேற்று இடம்பெற்ற மகளிர் மாநாட்டில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

இது குறித்து எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்துள்ளதாவது” மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 14 பிரதேச செயலகங்கள் ஊடாகவும் பெண்களுக்கான திட்டங்களையும்,வேலைவாய்ப்புகளையும் ஏற்படுத்தும் திட்டத்தினை நான் செயற்படுத்துவேன்.

மயிலத்தமடு பிரச்சினை குறித்து நான் இங்கு பேசவேண்டும்.

பல ஆட்சியாளர்கள் வருகின்றார்கள், உத்தரவாதங்களை தருகின்றார்கள்.

இந்த வருட இறுதிக்குள் உங்களுக்கு இந்த மேய்ச்சல் தரை பிரச்சினைக்கான சிறந்த உத்தரவாதம் வழங்கப்படும்.

அந்த பகுதி விலங்குகளுக்கு உணவுகளைப் பெற்றுக்கொடுப்பதற்கான மிகமுக்கியமான பகுதியாக இருக்கின்றது.

இதேபோன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் தொல்லியல்சார்ந்த இடங்கள் மத ரீதியான இடங்களில் காணப்படும் பிரச்சினைகளும் முக்கியமாகவுள்ளது.

2025 என்பது தேர்தல் வருடமாகவுள்ளது. தேர்தல் வரும்போது அனைவரும் பேசுவார்கள்.

ஆனால் ஐக்கிய மக்கள் சக்தியிடம்தான் அதற்கான தீர்வுகள் இருக்கின்றது.

ஐக்கிய மக்கள் சக்தியானது எந்த அரசாங்கத்திற்கும் அச்சப்படுகின்ற கட்சி அல்ல.

ஆனால் அரசாங்கம் எம்மைப்பார்த்து அச்சமடைந்துள்ளது.

மே மாதம் 01ஆம் திகதி மேதினக் கூட்டத்திற்காக நாங்கள் கோரிய இடத்தினை அரசாங்கம் வேறு ஒரு தரப்பிற்கு வழங்க முனைகின்றது.

ஐக்கிய மக்கள் சக்தியின் வளர்ச்சியை பார்த்து அரசாங்கம் பயப்படுகின்றது. அரசாங்கம் இடம்கொடுத்தாலும் கொடுக்காவிட்டாலும் ஒரு இலட்சம் தொழிலாளர்களை அழைத்து கொழும்பில் மக்கள் சார் தொழிலாளர் புரட்சியை நாம் முன்னெடுப்போம்” இவ்வாறு எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

CATEGORIES
Share This