பாகிஸ்தான் பொது தேர்தல் ஒத்திவைப்பு?

பாகிஸ்தான் பொது தேர்தல் ஒத்திவைப்பு?

பாகிஸ்தான் நாட்டில் பெப்ரவரி மாதம் 8 ஆம் திகதி பொது தேர்தல் நடத்துவதற்கு அந்நாட்டு தேர்தல் ஆணையம் முடிவு செய்தது. 

இதுதொடர்பாக ஏராளமான பிரச்சினைகள் ஏற்பட்ட நிலையில், பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் அறிவிக்கப்பட்ட திகதியில் தேர்தலை நடத்தி முடிக்க அந்நாட்டு தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டு இருந்தது.

இந்த நிலையில், பாகிஸ்தானில் அடுத்த மாதம் நடைபெற இருந்த பாராளுமன்ற தேர்தல் ஒத்திவைக்கப்படுகிறது.

இதற்கான தீர்மானம் அந்நாட்டு பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு உள்ளது. பாராளுமன்ற தேர்தலை ஒத்திவைக்க கோரும் தீர்மானத்திற்கு பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிஃப், பாகிஸ்தான் தகவல் தொடர்பு துறை மந்திரி முர்தாசா சோலங்கி எதிர்ப்பு தெரிவித்தனர்.

தீர்மானத்தின் படி பாகிஸ்தானின் பெரும்பாலான பகுதிகளில் கடுமையான குளிர்காலம் நிலவுவதால், மக்கள் வாக்களிக்க அதிக எண்ணிக்கையில் வர முடியாத சூழல் ஏற்படலாம் என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது. 

திட்டமிட்டப்படி பாராளுமன்ற தேர்தலை நடத்தி முடிக்க அந்நாட்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், தேர்தலை ஒத்திவைக்கக் கோரும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இருப்பது அந்நாட்டு அரசியலில் பரபரப்பான சூழலை உருவாக்கியுள்ளது.

CATEGORIES
TAGS
Share This