யாழில் பொலிஸாரினால் ஒட்டப்பட்ட ஸ்ரிக்கர்கள்!

யாழில் பொலிஸாரினால் ஒட்டப்பட்ட ஸ்ரிக்கர்கள்!

யாழ்ப்பாணம் – மல்லாகம் பகுதியில் பொலிஸாரினால் விசேட சோதனை நடத்தப்பட்டதுடன் யுக்திய 2024 சின்னம் பொறித்த ஸ்ரிக்கரும் ஒட்டப்பட்டது.

பதில் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோனின் கருத்திட்டத்திற்கமைவாக நாடு பூராகவும் முன்னெடுக்கபடும் யுக்திய விசேட செயற்றிட்டம் நேற்று  (05) காங்கேசன்துறை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சந்தன கமகே தலைமையில் முன்னெடுக்கப்பட்டது.

மல்லாகம் சந்திக்கு அண்மையில் மாலை ஆரம்பமான குறித்த செயற்றிட்டத்தில் பொலிஸார்  மோப்பநாய் சகிதம் விசேட சோதனை நடவடிக்கைகளை  முன்னெடுத்தனர்.

சோதனைக்குட்படுத்தபட்ட  வாகனங்களுக்கு யுக்திய 2024  சின்னம் பொறிக்கப்பட்ட ஸ்ரிக்கரும் பொலிசாரால் ஒட்டப்பட்டது.

குறித்த யுக்திய சோதனை நடவடிக்கைகளில் காங்கேசன்துறை பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர், பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் , பொலிஸ் உத்தியோகத்தர்கள், போக்குவரத்து பொலிசார் என பலரும் கலந்து கொண்டனர்.

தொடர்ச்சியாக பருத்தித்துறை பகுதியிலும் குறித்த செயற்றிட்டம் முன்னெடுக்கப்பட்டது.

CATEGORIES
TAGS
Share This