மலையக ரயில் சேவைகள் பாதிப்பு!
ரயில் ஒன்று தடம் புரண்டதால் மலையக ரயில் போக்குவரத்து தடைபட்டுள்ளது.
பதுளையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயில் ஒன்று கிரேட் வெஸ்டன் மற்றும் நானுஓயா ரயில் நிலையங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் தடம் புரண்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
ரயில் பாதையை சீரமைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருவதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
CATEGORIES Uncategorized