ஆயிரத்திற்கும் மேற்பட்ட வெதுப்பக உற்பத்தி நிறுவனங்கள் பூட்டு!

ஆயிரத்திற்கும் மேற்பட்ட வெதுப்பக உற்பத்தி நிறுவனங்கள் பூட்டு!

அதிக நீர், மின்சார கட்டணம் மற்றும் VAT காரணமாக, பேக்கரிகள் உட்பட பாண் உற்பத்தி செய்யும் நாடளாவிய ரீதியில் உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட வெதுப்பக உற்பத்தி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதாக பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

பேக்கரி உற்பத்திகளின் விலை அதிகரிப்பு, முட்டையின் விலை அதிகரிப்பு மற்றும் பேக்கரி பொருட்களின் பாவனையிலிருந்து நுகர்வோர் விலகியமை போன்ற காரணங்களால் பேக்கரி தொழில்துறை பின்னடைவை சந்தித்துள்ளதாக அதன் தலைவர் என்.கே.குணவர்தன தெரிவித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This