பிரித்தானியாவில் உயரிய விருதை பெறும் இலங்கை தமிழர்!

பிரித்தானியாவில் உயரிய விருதை பெறும் இலங்கை தமிழர்!

இலங்கை பூர்விகமாகக் கொண்ட ஒரு பொருள் இருக்கும் குறிப்பிட்ட இடத்தை கண்டுபிடிக்கும் தொழில் நுட்பத்தை உருவாக்கியதற்காக (location-tracking technology), (சபேசன் சிதம்பரநாதன்) பிரித்தானிய அரசரின் புதுவருட மதிப்பளிக்கும் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இவருடைய லொகேஷன் ட்ராக்கிங் தொழில் நுட்பம், பிரித்தானிய தேசிய மருத்துவ சேவை, மருத்துவமனைகள், விமானம் தயாரிப்பு நிறுவங்கள் மற்றும் சில்லறை வியாபாரிகள் போன்றோர் பயன்படுத்துகின்றார்கள்.

ஆராட்சிக்காக முனைவர் பட்டம் பெற்ற டாக்டர் சிதம்பரநாதன் தொழில் நுட்ப கண்டுபிடிப்பு, அறிவியலை முன்னேற்றியது, பொறியியல் மற்றும் கணிதம் போன்ற படங்களை முன்னேற்ற பாடுபட்டதற்காக இவ்வாறு சார் என்ற பட்டம் அளிக்கப்பட்டு கௌரவிக்கப்படுகிறார்.

இலங்கையை பூர்விகமாகக் கொண்ட டாக்டர் சிதம்பரநாதன் ஷெபீல்ட் பல்கலைக்கழகத்தில் தனது பல்கலைக்கழக கல்வியை ஆரம்பித்து, பின்னர் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக, கார்பஸ் சிகிரிஸ்டி கல்லூரியில் ஆராட்சி கல்வியை முடித்தார் (PhD at Corpus Christi College, Cambridge)

இந்த பட்டம் பெறுவது தொடர்பாக அவர் தெரிவிக்கையில், நான் இந்த நாட்டுக்கு சிறுவனாக கல்வி கற்பதற்கு வந்தேன், தனிப்பட்ட ரீதியில் எனக்கு கனவு நினைவானதாக நினைக்கிறேன், என்று தெரிவித்தார்.

CATEGORIES
TAGS
Share This