சீனா குறித்த பிரதமர் மோடியின் பதில் பயனற்றது, பலவீனமானது: காங்கிரஸ் விமர்சனம்!

சீனா குறித்த பிரதமர் மோடியின் பதில் பயனற்றது, பலவீனமானது: காங்கிரஸ் விமர்சனம்!

இந்தியா- சீனா இடையிலான பிரச்சனை குறித்த பிரதமர் மோடியின் பதில் பயனற்றது, பலவீனமானது என காங்கிரஸ் கட்சி விமர்சனம் செய்துள்ளது.

இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் ஜெய்ராம் ரமேஷ் கூறியதாவது:-

சீனாவுக்கு ஒரு வலிமையான கருத்தை அனுப்புவதற்கு பிரதமர் மோடிக்கு வாய்ப்பு கிடைத்தது. எனினும், அவருடைய பயனற்ற மற்றும் பலவீனமான பதில், இந்திய பகுதிகள் தங்களுக்கானது எனக் கூறி வரும் சீனாவிற்கு மேலும் தையரித்தை கொடுப்பதை போல் இருக்கிறது.

சீனா பிரச்சனை தொடர்பான பிரதமர் மோடியின் ரியாக்சன் அவமானகரமானது மட்டும் அல்ல. மேலும், நமது எல்லையை பாதுகாக்க உயிர்த்தியாகம் செய்த நம்முடைய தியாகிகளை இழிவுப்படுத்துவதாகும்.

CATEGORIES
TAGS
Share This