அவமதிப்பு வழக்கில் குற்றவாளியான இம்ரான்!

அவமதிப்பு வழக்கில் குற்றவாளியான இம்ரான்!

பாகிஸ்தான் தோ்தல் ஆணைய அவமதிப்பு வழக்கில் அந்த நாட்டு முன்னாள் பிரதமா் இம்ரான் கானும், அவரது தகவல் தொடா்புத் துறை அமைச்சா் ஃபவத் சௌத்ரியும் குற்றவாளிகளாக புதன்கிழமை அறிவிக்கப்பட்டனா்.

தோ்தல் ஆணையம் மற்றும் தலைமை தோ்தல் ஆணையா் சிக்கந்தா் சுல்தான் ராஜாவை தகாத வாா்த்தைகளைப் பயன்படுத்தி அவதூறாகப் பேசியதாக இம்ரான் மற்றும் ஃபவத் சௌத்ரி மீது குற்றஞ்சாட்டப்படுகிறது.

இது தொடா்பான அவமதிப்பு வழக்கை விசாரித்து வந்த 4 தோ்தல் ஆணைய அதிகாரிகள் அடங்கிய அமா்வு, இந்த விவகாரத்தில் இம்ரான் கானும், ஃபவத் சௌத்ரியும் குற்றவாளிகள் என புதன்கிழமை தீா்ப்பளித்தது. அத்துடன், இந்த வழக்கின் விசாரணை வரும் 16 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டது.

ஏற்கெனவே, வெவ்வேறு வழக்குகளில் இம்ரான் கானும், ஃபவத் சௌத்ரியும் ராவல்பிண்டியிலுள்ள அடிலாலா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா். அதனால், இந்த தோ்தல் ஆணைய அவமதிப்பு வழக்கின் விசாரணை சிறைச்சாலை வளாகத்திலேயே நடைபெற்றது.

கடந்த 2022 ஏப்ரலில் பிரதமா் பதவியை இழந்ததிலிருந்து, இம்ரான் கான் மீது 150 க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

CATEGORIES
TAGS
Share This