எரிபொருள் தட்டுப்பாடு – குதிரையில் சென்று உணவு விநியோகம்!

எரிபொருள் தட்டுப்பாடு – குதிரையில் சென்று உணவு விநியோகம்!

இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இதனால் வாகன சாரதிகள் நீண்ட தூரம் வரிசையில் நின்று தங்களது வாகனங்களுக்கான எரிபொருளை பெற்றுக்கொள்கின்றனர்.

இந்தநிலையில், தனியார் நிறுவனத்தில் உணவு விநியோகம் செய்யும் ஊழியர் ஒருவர் தனது உந்துருளியில் எரிபொருள் இல்லாததால் குதிரையில் சென்று உணவு விநியோகம் செய்துவருகின்றார்.

குறித்த ஊழியர் குதிரையில் சென்று உணவு விநியோகம் செய்யும் காணொளி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.

CATEGORIES
TAGS
Share This