பதுளையில் ஹெரோயினுடன் 5 பேர் கைது!

பதுளையில் ஹெரோயினுடன் 5 பேர் கைது!

பதுளை, போதைப்பொருள் தடுப்புப் பிரிவுப் பொலிஸ் அதிகாரிகளால் ஹெரோயின் போதைப்பொருளுடன் ஐந்து சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.

36, 42, 57, 63 மற்றும் 67 வயதுடையவர்களே நேற்று இவ்வாறு கைது செய்யப்பட்டனர் எனவும், இவர்கள் பதுளை நெலும்கம மற்றும் பஹல்கம பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.

பதுளை நகரைச் சுழவுள்ள பகுதிகளில் ஹெரோயின் உள்ளிட்ட போதைப்பொருள் விற்பனையில் இக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர் என்று கிடைத்த தகவலின் அடிப்படையில் சோதனை நடத்தப்பட்டு, கைது இடம்பெற்றது.

பதுளை அந்தெனிய பாலம் மற்றும் கலன் சந்திக்கு அருகில் இரண்டு சந்தேகநபர்களும், பதுலுபிட்டி, கைலாகொட மற்றும் நெலும் கமடி ஆகிய இடங்களில் மூன்று சந்தேநபர்களும் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டனர்.

பதுளை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் வசந்த கந்தேவத்த மற்றும் பிரதேச குற்றப் புலனாய்வுப் பொறுப்பு அதிகாரி பி.ஓ.பி.பிரியந்த சர்மிந்த ஆகியோரின் பணிப்புரையின் பேரில் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் உத்தியோகத்தர்கள் இந்தச் சோதனையை மேற்கொண்டனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் பதுளை நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளனர்.

CATEGORIES
TAGS
Share This